search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெஸ்ட் இண்டீஸ் இலங்கை டெஸ்ட் தொடர்"

    கடுமையான விதிமுறை மீறல் செய்த காரணத்திற்காக பெரிய தண்டனையை எதிர்நோக்கி இலங்கை கேப்டன் சண்டிமல் உள்ளார். #WIvSL #Chandimal
    வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் நடைபெற்றது.

    2-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாள் ஆட்டத்திற்கு இலங்கை வீரர்கள் களம் இறங்க தயாராக இருந்த நிலையில், போட்டி நடுவர்கள் இலங்கை நிர்வாகத்திடம் 2-வது நாள் ஆட்டத்தின்போது இலங்கை அணி (கேப்டன் சண்டிமல்) பந்தை சேதப்படுத்தியுள்ளது. இதனால் வேறு பந்துடன் நீங்கள் பந்து வீச வேண்டும் என்று கூறினார்கள்.

    இதற்கு இலங்கை அணி கேப்டன் சண்டிமல், பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா, மானேஜர் அசங்கா குருசிங்கா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் களம் இறங்க மறுத்துவிட்டனர்.

    சுமார் ஒன்றரை மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் இலங்கை வீரர்கள் களம் இறங்கினார்கள். சண்டிமல் மீது பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக போட்டி நடுவர் அவருக்கு 100 சதவிகித அபாரத்துடன் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதித்தார். இதை எதிர்த்து சண்டிமல் மேல்முறையீடு செய்துள்ளார்.



    இந்நிலையில் 3-வது நாள் காலையில் ஒன்றரை மணி நேரம் களம் இறங்காதது ஐசிசியின் விதிமுறையை கடுமையாக மீறியதாக மூன்று பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இதுகுறித்து விசாரணை நடத்த மைக்கேல் பெலோஃப்-ஐ ஐசிசி அறிவித்துள்ளது. இவர் விசாரணை முடிவில் தண்டனை வழங்குவார்கள். இவர்கள் செய்த குற்றம் ஐசிசியின் லெவல் 3 அபாரதத்திற்குள் வருவதால், இரண்டு முதல் நான்கு டெஸ்ட் போட்டியில் விளையாடிய அல்லது நான்கில் இருந்து 8 ஒருநாள் போட்டியில் விளையாட தடைவிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
    ×